ஈராக்கில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்துக்கு அலட்சியமும், பாதுகாப்பு நடைமுறையில் இருந்த கோளாறுமே காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்நாட்டு உள்துறை அமைச்சர் விவரம் தந்தார்.
400 பேர் இருக்கக்கூடிய மண்டபத்தில் 900 பேர் இருக்க அனுமதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
தீச்சம்பவம் தற்செயலாக நடந்தது, ஊழியர்களின் அலட்சியத்தால் நடந்தது என்று விசாரணை முடிவுகள் தெரிவித்தன.
தீப்பற்றக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி மண்டபம் அலங்கரிக்கப்பட்டதால் தீ இன்னும் விரைவாகப் பரவியது என்று அமைச்சர் கூறினார்.
மண்டபத்தில் இருந்த கதவுகளின் எண்ணிக்கை குறைவு. அதோடு அந்தக் கதவுகள் மிகவும் சிறியதாக இருந்ததால் மீட்புக் குழுக்களால் மக்களை உரிய நேரத்தில் காப்பாற்ற முடியவில்லை என்று அவர் சொன்னார்.
தீ விபத்தில் 107 பேர் மாண்டனர். மேலும் 150 பேர் காயமடைந்தனர்.
குடும்பங்களுக்கு உதவி தர வேண்டும். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை முடிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.