தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம்; ஜமீயத்துல் உலமா தலைவருக்கே தண்ணி காட்டிய செயலாளர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம்; ஜமீயத்துல் உலமா தலைவருக்கே தண்ணி காட்டிய செயலாளர்!


தெஹிவளை பகுதியில் சவுதி அரேபியாவை சேர்ந்த தனவந்தர் பாபக்கர் அவர்கள் வாங்கி, முஸ்லிம் சமூகத்திற்காக அன்பளிப்பு செய்யப்பட்ட சுமார் 50 கோடி ரூபா பெருமதியான காணி விவகாரம் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இதுவரையில் சுமார் 25 வருடங்களாக தங்களுடையது என ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டு, விற்பனை செய்ய முற்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு உரிமையுடைய இக்காணியை பாபக்கர் அவர்களின் வஸீயத்படி இதை முஸ்லிம் சமூகத்தின் ஒரு பொதுச் சொத்தாக மாற்றும் பொருட்டு சமூகத் தலைமைகள், புத்தி ஜீவிகள், அகில இலங்கை ஜமியத்துல் உலமா மற்றும் வக்பு சபை போன்றவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இது சம்பந்தமாக இரு
வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றது.
பொது மக்கள் வக்பு வாரியத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் வக்பு வாரியம் இதை வக்புசபையில் பதிவு செய்து கொடுக்க நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளது.

மேலும் இது விடயத்தில் மீயத்துல் உலமாவின் செயலாளர்களில் ஒருவரும் இந்த காணி அபகரிப்பு விடயத்தில் நேரடியாக சம்பந்தபட்டுள்ளதால், ஜமீயஆவின் தலைவர் அவர்கள், முஸ்லிம் சமூகம் பிரயோசனமடையும் வகையிலான ஒரு வக்பு சொத்தாக பாபக்கர் அவர்களின் வஸீயத்படி இதை பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மிக மிக உறுதியாக காணப்படுகின்றார். 

இந்த வகையில் இதனுடன் சம்பந்தப்பட்ட செயலாளரை அணுகி ஜமீயாவின் தலைமை உட்பட, அரசியல் தலைவர்கள், சமூக முக்கியஸ்தர்கள் பாபக்கர் அவர்கள் தன் மனதால் அல்லாஹ்வுக்காக வக்பு செய்த இச் சொத்தை, வக்பு சபையில் பதிவு செய்து இப்பகுதி மக்களிடம் கையளிக்கும் படி இவருக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

இச் சொத்தினை வக்பு செய்யும் பொருட்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை உடனடியாக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களிடம் கையளிக்கும் படியும், இதற்காக உழைக்கும் மக்களை அணுகி அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும்படி ஜமீயதுல் உலமாவின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தார். 

இதற்கு அமைய குறிப்பிட்ட செயலாளர் ஜமீயாவின் தலைவரிடம் விருப்பம் தெரிவித்ததோடு , அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கௌரவ தலைவரிடம் உறுதிமொழி வழங்கியிருந்தார்.

எனவே இதற்கான பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தி, இச்சொத்தை வக்பு செய்து, பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர, கடந்த 25.10.2023 மாலை 4 மணி அளவில் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களின் தலைமையிலும் பொதுமக்கள் சார்பாக பேருவளை ஹில்மி அவர்களின் தலைமையுடனும் பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அனைத்துக்கும் சம்மதித்து, தலைவரிடம் வாக்குறுதி அளித்து, அத்தனைக்கும் ஒப்புக் கொண்ட ஜமீயத்துல் உலமாவின் செயலாளர், மறுபக்கத்தில் இந்த இடம் வக்பு செய்யப்படுவதை தடுக்கும் விதமாக தனது கையொப்பத்துடனான எதிர்மனு ஒன்றை, பொதுமக்கள் வக்பு வாரியத்திற்கு எதிராக தொடர்ந்திருக்கும் வழக்கில், எதிர் தரப்பாக உள் னுழைவதற்காக மனு ஒன்றை தாக்கல் செய்ய முயற்சி செய்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து கடந்த 25.10.2023 4 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு செல்வதை அதே தினம் 3 மணியளவில் பொதுமக்கள் கைவிட்டனர்.

கடந்த 27.10.2023 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இவ்விடம் தமக்குச் சொந்தமான (private property) எனவும், இதன் மீது ஒரு அறக்கட்டளை எழுதப்பட்டுள்ளது எனவும், எனவே தம்மை இவ்வழக்கின் ஒரு பங்குதாரராக நுழைவதற்கு அனுமதிக்கும்படியும் உலமாக்களின் சட்டத்தரணிகள் வாதங்களை முன் வைத்தனர். 

பள்ளிவாசல் தரப்பு, அவர்களை இவ்வழக்கில் அனுமதிக்க முடியாது , அவர்கள் பள்ளிவாசலை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர் என்ற வாதத்தினை முன் வைத்தினர். எனினும் இவ் வழக்கிற்கான இவர்களின் உள் நுழைவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

அல்லாஹ் செய்த பெரிய கிருபையும், உதிப்பும் 1997 ஆம் ஆண்டு பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கி இந்த உலமாக்களின் பெயரில் எழுதியவர், 2002 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை வந்து தன் பெயரில் மாற்றி, தெஹிவளை நகர சபையில் இதை ஒரு பள்ளிவாசலாக, பொதுச் சொத்தாக மாற்றும்படி தனது விருப்பக்கடிதத்தை கையளித்து, இந்த இடம் சம்பந்தமான தனது இறுதி விருப்பத்தை தெரிவித்துக் சென்றார். 
அல்ஹம்துலில்லாஹ்.

அந்தக் கடிதம் நகர சபையிலிருந்து காணாமல் போய் உள்ளது.

பாபக்கரின் பெயரில் இருக்கும் இடத்திற்கு இத்தனை தில்லு முல்லுகள் என்றால், இவர்களின் பெயரில் இருந்திருந்தால், நிலைமை என்னவாக இருந்திருக்கும். அல்ஹம்துலில்லாஹ் அந்த மன நிறைவான மனிதருக்கு அல்லாஹ் மறு உலகில் உயர்வான இடத்தை கொடுப்பானாக.

மேலும் இதில் ஒரு விசித்திரமான விடயம் என்னவென்றால், அனைத்து வழக்குகளிலும் மாற்றுமத சகோதர சட்டத்தரணிகள் இது முஸ்லிம் மக்கள் இறைவனை வணக்கும் ஒரு பள்ளிவாசல், இது காப்பாற்றப்பட்ட வேண்டு்ம் என வதாடுவதும், முஸ்லிம் சட்டத்தரணிகள் இது பள்ளிவாசல் அல்ல தனி நபர் சொத்து ( privat property ) என வாதடுவதும் இதன் விஷேட அம்சமாகும்.

சிந்திக்க வேண்டிய விடயம்.

தமது தலைவரிடமும் சமூக முக்கியஸ்தர்களிடமும் இவ்விடத்தை வக்பு செய்வதற்கு விருப்பம் தெரிவித்து, அதன் பெயரில் வாக்குறுதி வழங்கி, பின்னர் வாக்குறுதிக்கு மாறு செய்தது மிகவும் கவலைக்குரியர் துரோகமாகும்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி தெஹிவலை பள்ளிவாசால் சம்மேலனத்தையும் கூட்டத்திற்கு அழைத்து, அவர்கள் முன் நிலையி்ல் இது பள்ளிவாசால் தான். இதை இதை விற்பனை செய்ய நினைத்து பார்க்கவுமில்லை என வாக்குறுதியளித்துவிட்டு, வட்டிக்கு அடகு வைக்க , விற்பனை செய்ய, கைமாற்ற, பரிசாக கொடுக்க முடியும், என வக்பு சட்டத்திற்கு நேர் விரோதமாக எழுதி வைத்திருக்கும் அரக்கட்டளையை நீதிமன்றம் மூ்லம் அமுல் படுத்த முயற்சிபது ஒரு சமூக துரோகம் அல்லவா.

25 வருடங்களாக மக்களை, பள்ளிவாசல் சம்மேலனத்தை ஏமாற்றி, 
தற்போது சமூக முக்கியஸ்தர்களையும் ஏமாற்றி, ஜமீயதுல் உலமாவையும் அதன் தலைவரையும் ஏமாற்றிவிட்டனர். 

இவ்வாறானவர்கள் ஜமீயதுல் உலமாவின் பிரதான செயலாளர், மற்றும் தலைமை பதவிகளுக்கு வரும் பட்சத்தில் பொதுச் சொத்துக்களின் நிலமை என்னவாகும் என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பாக பல தரப்பினர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன் வந்த போதும், இதனுடன் சம்பந்தப்பட்ட உலமாக்கள் காலாகாலமாக செய்து வரும் பொய் சத்தியம், நயவஞ்சகத்தனம் காரணமாக பொதுமக்கள் பேச்சுவார்த்தைகளை நிராகரித்து வந்தனர்.

இறுதியாக இந்த விடயத்தில் அகில இலங்கை ஜமியத்தில் உலமாவின் தலைவர் பேச்சுவார்த்தைக்காக ஒருவரை நியமித்ததின் நிமித்தம், கௌரவ தலைவரின் வார்த்தையை மதிக்கும் விதமாக பொதுமக்கள் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தலைவரின் வார்த்தையை அவமதித்து, தலைமைத்துவத்திற்கே தண்ணி காட்டினார் செயலாளர்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.