மொனராகலையைச் சேர்ந்த சிறிகல மொனரகெலேவத்தை (உடகோட்டாச) பகுதியைச் சேர்ந்த தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்று காலை குழந்தையின் தாய், குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக கணவனிடம் விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
சிறிது தூரம் சென்றதும் குழந்தை ஓயாமல் அழும் சத்தம் கேட்டு வீடு திரும்பிய அவர், தரையில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்வதை கண்டுள்ளார்.
மனைவி அவரைத் தாக்கியதுடன் குழந்தையை தூக்கிச் சென்று மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த சிசு மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.