மெக்ஸிகோ அரசு ஒரு அசாதாரண நிகழ்வை நடத்தியுள்ளது. இது மனித நாகரிக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக கருதப்படுகிறது. மேலும், மக்களிடம் வேற்றுகிரகவாசிகள் மற்றும் UFOக்கள் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.
அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்களின் (UFO) சாத்தியக்கூறுகள் குறித்த பொது விசாரணையை அமெரிக்க அரசு நடத்திய சிறிது காலங்களிலேயே, தற்போது மெக்சிகன் சட்டமன்றமும் முதல் முறையாக இதேபோன்ற இந்த நிகழ்வை நடத்தியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (12) "மனிதர் அல்லாத" வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் என்று நம்பப்படும் இரண்டு சடலங்கள் பொதுமக்களுக்குக் காட்டப்பட்டன. இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை மெக்சிகன் பத்திரிகையாளர் மற்றும் யூஃபாலஜிஸ்ட் ஜெய்ம் மௌசன் வழிநடத்தினார். அவர் பல தசாப்தங்களாக வேற்று கிரக நிகழ்வுகளை ஆராய்ந்து வருகிறார். மேலும் இந்த நிகழ்வு மெக்சிகன் விஞ்ஞானிகளால் இணைந்து நடத்தப்பட்டது.
Mexico is unboxing aliens 👽😂. pic.twitter.com/OrToUTjShX
— Davidi Ohmbra (@iohmbra) September 13, 2023