தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தில் முதன்முறையாக திருத்தம் கொண்டு வரப்பட்ட நிலையில், சர்வதேச அளவில் தயாரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் கதையை கூறும் '800' திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கு அமைச்சர் பந்துல குணவர்தன உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த தீர்மானம், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு செலுத்தும் அர்த்தமுள்ள மரியாதையாக அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தப் படத்தை சிங்கள மொழியில் டப்பிங் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்
இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின், கொள்கைப்படி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த திரைப்படம், உள்ளூர் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதால், இந்த திரைப்படத்திற்கு மட்டுமே தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு, கூறியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்த திரைப்படம் உலகம் முழுவதிலும் நான்கு மொழிகளில் திரையிடப்படவுள்ளது.