ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான அதிகாரிகள் உடந்தை! செனல் 4 தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான அதிகாரிகள் உடந்தை! செனல் 4 தகவல்!


இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.


இங்கிலாந்தின் செனல் 4 இல் நாளை (05) ஒளிபரப்பப்படவுள்ள நேர்காணல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ராஜபக்ஷர்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதற்காக இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த நபர்களுடன் ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக 2018 இல் ஒரு சந்திப்பு இடம்பெற்றதாகவும் அந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சந்திப்பு இடம்பெற்றுதுடன் சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்ஷக்களுக்குத் தேவை இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் அப்போது தான் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி" எனக் கூறியதாக  ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.


"தாக்குதல் திட்டம்  என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, இது இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது."


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பிடித்தபோது சுரேஷ் சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.