2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிடுவதாக உறுதியளிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆவணப்படத்தை ஐக்கிய இராஜ்ஜியத்தின் சேனல் 4 நியூஸ் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி ஒளிபரப்ப திட்டமிடப்பட்ட “இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் – வெளிப்பாடுகள்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அரசாங்க அதிகாரிகளை உடந்தையாகக் கொண்டு, உயர் பதவியில் இருக்கும் இடித்துரைப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.