2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இறுதித் திகதியை ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் ஒக்டோபர் 02 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவிருந்தன.
எவ்வாறாயினும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.