20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 08 பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு கூரிய ஆயுதங்களால் குத்தி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
களுத்துறை தெற்கில் உள்ள கலீல் பிளேஸில் வசிக்கும் சேயர் முகமத் முகமத் பாரிஸ் என்பவர் கூரிய ஆயுதங்களால் கொல்லப்பட்டமை தொடர்பில் எட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி, 46 வயதான மொஹமட் ஜைன் முகம்மது ஹம்சா, 49 வயதான அப்துல் கரீம் மொஹமட் ரயிஸ்தீன், 59 வயதான மொஹமட் மவ்ஸ் மொஹமட், 45 வயதான மொஹமட் ரியாஸ்தீன் மொஹமட், 47 வயதான மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஜின்னா, 43 வயதான மொஹமட் ஜிப்ரி மொஹமட் பிர்தவ்ஸ், 44 வயதான மொஹமட் சஹீர் மொஹமட் சியாம், 45 வயதான மொஹமட் நிலாப்தீன் மொஹமட் அஜீல் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.