மொரோக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 12 ஆக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டாயிரத்து 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், மொரோகோவின் தெற்கில் உள்ள மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்த நாட்டின் மன்னரான ஆறாம் முகமது மொரோக்கோரவில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் பிற உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.