கல்வி நிலையத்துக்கு சென்ற 19 வயது மாணவியை காணவில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்வி நிலையத்துக்கு சென்ற 19 வயது மாணவியை காணவில்லை!


கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவி ஒருவர் கடந்த மாதம் 05 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குறித்த மாணவியை பெற்றோர்கள் தேடி வருகின்றனர்.


கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த புவனேஸ்வரன் ஆர்த்தி என்பவர் கடந்த 05/08/2023 இல் இருந்து காணாமல் போயுள்ளார்.


பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் இவரை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.


இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522 அல்லது 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு மிக மனவருத்தத்துடன் தந்தை கேட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.