தேசிய மதிப்பீட்டுக் கொள்கைக்கமைய அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவினங்களை மதிப்பீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, அந்த அறிக்கைகளை மும்மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அலரி மாளிகையில் இன்று (08) இடம்பெற்ற தேசிய மதிப்பீட்டு கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.