VIDEO: கிரிக்கெட்டில் சோம்பேறித்தனமான ரன் அவுட்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: கிரிக்கெட்டில் சோம்பேறித்தனமான ரன் அவுட்?

உலகெங்கும் டி20 தொடர்கள் பெரிய வெற்றி பெற்று வருகின்றன. இந்த வகையில் வெஸ்ட் இண்டிஸ் தீவுக் கூட்டத்தில் 2013ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்தத் தொடர் டபுள் ரவுண்டு ராபின் முறையில் நடத்தப்படுகிறது.

இந்த வருடமும் நேற்று முன்தினம் இந்த தொடர் ஆரம்பித்து உள்ளது. நேற்று நடந்த போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியும், பார்படோஸ் ராயல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கான டாசில் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜான்ஸ்டைன் சார்லஸ் 30, பாப் டு பிளிசிஸ் 46 ரன்கள் என வலிமையான துவக்கம் தந்தார்கள். ஜிம்பாப்வே நாட்டின் ஜோடியான சீன் வில்லியம்ஸ் 47, சிக்கந்தர் ராசா 23 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 38 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு துவக்கம் தருவதற்கு ரஹீம் கார்ன்வால், கைய்ல் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினார்கள். வீசப்பட்ட ஆட்டத்தின் முதல் பந்திலேயே பரிதாபமான நிகழ்வு நடந்தது.

முதல் பந்தை எதிர்கொண்ட ரஹீம் கார்ன்வால் பின்புறமாக லெஃக் சைடு பந்தை தட்ட, அங்கு உள்வட்டத்தில் நின்றிருந்த பீல்டரின் கையில் பந்து பட்டு நழுவியது, இந்த நேரத்தில் மேயர்ஸ் ரன்னுக்கு அழைக்க, கார்ன்வால் கிரீசை விட்டு வெளியே வந்து விட்டார். மேயர்ஸ் எதிர்முனைக்கு நகர்ந்து விட்டார். ஆனால் கார்ன்வால் உடல் பருமனால் தொடர்ச்சியாக வேகமாக வந்து ரன்னை முடிக்க முடியவில்லை.

அவர் ஆரம்பத்திலேயே விக்கெட்டை விட்டுக் கொடுத்து விட்டார். பொறுமையாக அங்கிருந்து பந்தை கையில் எடுத்து மிக மெதுவாக ஸ்டம்ப் நோக்கி ஃபீல்டர் அடிக்க, அவர் பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். பொதுவாக அவரை இப்படியான கடினமான சிங்கிள் ரன்னுக்கு கூப்பிட மாட்டார்கள். அவருடைய வேலை பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் அடிப்பது மட்டுமே. ஆனால் நேற்று அவசரப்பட்டு ஆட்டம் இழந்து விட்டார்.

பார்படோஸ் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து எடுக்க முடிந்த ரன்கள் 147 மட்டுமே. எனவே மிக எளிதாக செயின்ட் லூசியா கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றது. உலகெங்கும் நடைபெறும் டி20 தொடர்களில் கரீபியன் பிரிமியர் லீக் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.