போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தப்பிக்க முயலும் இலங்கையர்களைப் பிடிக்க கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் விழிப்புடன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தப்பிக்க முயலும் இலங்கையர்களைப் பிடிக்க கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் விழிப்புடன்!

போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களை கண்டறிய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரகசியமாக நிறுத்தப்பட்ட குடிவரவு எல்லை சேவை முகவர்களால் குறைந்தது ஏழு பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் போலியால செய்யப்பட்ட வெளிநாட்டு விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளுடன் காணப்பட்டதாகவும், மனித கடத்தல்காரர்களால் அதிக கட்டணம் செலுத்தி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் இலுக்பிட்டிய கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த இலுக்பிட்டிய, வடக்கில் மிகப் பெரிய மனித கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பலர் கடத்தல்காரர்களுக்கு தலா ரூ. 5 மில்லியன் வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் உயர் கண்காணிப்பு காரணமாக பலர் ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்புவதாகவும், தற்போது இவர்கள் வான்வழிப் பாதையை நாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தாய்லாந்து, இந்தோனேஷியா, மியன்மார், வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆரம்பத்தில் பயணம் செய்த பல இலங்கையர்களும் கடல் மார்க்கமாக ஐரோப்பாவிற்குப் பயணிக்கத் தெரிவு செய்துள்ளதாகவும் இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களை கைது செய்ய விமான நிலையத்தில் நன்கு பயிற்சி பெற்ற குடிவரவு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.