அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் நாளை (30) அரச வங்கிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரச வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கிகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நேற்று முதல் விபரம் சரிபார்க்கப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்குரிய ஜூலை மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.