நாட்டின் சனத்தொகையில் 4 வீதமானோருக்கு நினைவு இழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் சனத்தொகையில் 4 வீதமானோருக்கு நினைவு இழப்பு!


இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


வயோதிபத்துடன் முளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர் என் குமாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


முறையான உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்த நிலைமையை குறைக்க முடியும் என மனநல வைத்திய நிபுணர் என் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.