நுவரெலியா - பம்பரக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் 03 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற போது அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த நான்கு பேரும் சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பம்பரக்கலையை சேர்ந்த 16 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நுவரெலிய பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.