10 மாதங்களாக காணவில்லை; இவரை கண்டால் உடனடியாக தகவல் தாருங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 மாதங்களாக காணவில்லை; இவரை கண்டால் உடனடியாக தகவல் தாருங்கள்!


காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


இந்த இளைஞன் கடந்த 2022 வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் அவரது தாயார் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


கலஹுகொட மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கலிங்க ரமேஷ் சதுரங்க பெரேரா என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.


சுமார் 05 அடி 05 அங்குல உயரம் கொண்ட இந்த இளைஞன் தனது இடது கையில் பச்சை குத்தியுள்ளார்.


அவர் கடைசியாக நீலம் மற்றும் வெள்ளை நிற கோடுகள் கொண்ட ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு நீண்ட கை சட்டை அணிந்திருந்தார்.


காணாமல் போன இளைஞனின் புகைப்படம் மேலே காட்டப்பட்டுள்ளதுடன், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


மினுவாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 8591612

மினுவாங்கொடை பொலிஸ் - 031 2295223


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.