
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தனக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருப்பதாகவும், நாட்டுக்கு பொருத்தமான பிரேரணைகளை மாத்திரமே கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.