நேற்று (22) செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்க அமைச்சர், மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு தேவையானதை விட அதிகமாக செய்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச இலங்கைக்காக பலவற்றை செய்த தலைவர் என நான் நினைக்கிறேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஓய்வு பெற்று தனது ஓய்வு நேரத்தை அனுபவிக்க வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளதாக தாம் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயங்கப்போவதில்லை எனவும், அது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார். (யாழ் நியூஸ்)