கடந்த மே மாதம் 25 ஆம் திகதி தயகம பிரதேசத்தில் பொலிஸ் ஜீப் மீது கற்களால் தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தயகம பொலிஸ் நிலையத்தின் குழுவொன்று தயகம, நெகேனஹிரவத்தை 3 பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை அவர்கள் கைது செய்ததோடு, 34 லீற்றர் சட்டவிரோத மதுபானத்தையும் கைப்பற்றினர்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்களை விடுவிக்கும் நோக்கில் சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற ஜீப் வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தயகம காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், வியாழக்கிழமை (08) இரவு சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 22 மற்றும் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் தயகம, நெகேனஹிரவத்தை 3வது பிரிவு பிரதேசத்தில் வசிப்பவர்கள்.
இவர்கள் நேற்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)