வாகன விபத்தில் சிக்கிய முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன விபத்தில் சிக்கிய முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்!


புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.


இந்த சம்பவம் இன்று (29) அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.


குறித்த நால்வரும் பயணித்த சிற்றூந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றின் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


காயமடைந்தவர்களில் எவரும் கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.