தனது பெயரைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம்கோரும் நபர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தும் தொழிலில், தமது குடும்பத்தினரோ, அமைச்சின் எந்தவொரு அதிகாரியோ ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப முடியும் என்றும், அந்த நிறுவனங்களை மாத்திரம் தொடர்பு கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.