காணும் பெண்களையெல்லாம் முத்தமிட்டு வந்த 'சீரியல் கிஸ்ஸர்'; நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணும் பெண்களையெல்லாம் முத்தமிட்டு வந்த 'சீரியல் கிஸ்ஸர்'; நீதிமன்றம் வழங்கிய தண்டனை!


ஸ்காட்லாந்தில் சிறுமி முதல் பெண்களின் உதடுகளை குறிவைத்து வைத்து முத்தமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 64 வயது நிரம்பிய 'சீரியல் கிஸ்ஸர்' சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வினோதமான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுவது உண்டு. குறிப்பாக குற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் சில இடங்களில் வேடிக்கையாக இருக்கும் அதேவேளையில் சில நாடுகளில் மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
இந்நிலையில் தான் ஸ்காட்லாந்தில் பெண்களை குறிவைத்து முத்தமிட்டு பொதுவெளியில் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த நபருக்கு ஸ்காட்லாந்து நீதிமன்றம் விசித்திரமான தண்டனை ஒன்றை வழங்கி உள்ளது. 

அந்த தண்டனை என்ன? உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:

ஸ்காட்லாந்தின் தலைநகராக எடின்பர்க் உள்ளது. இங்கு வசித்து வருபவர் மிர்சா முகமது சயீத் (வயது 64). இவர் திருமணம் முடிந்தவர். இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் தான் குறித்த நபருக்கு விசித்திரமான பழக்கம் ஒன்று இருந்துள்ளது. 

அது என்னவென்றால் பொதுவெளியில் பெண்களை ஏமாற்றி முத்தமிடுவது.

இதற்காக தினமும் குறித்த நபர் தனது செல்போனுடன் அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி செல்வார். அப்போது அவர் அங்கு தனியாக வரும் பெண்களிடம் தனது செல்போனை கொடுத்து போட்டோ எடுத்து தரும்படி உதவி கேட்பார். இதனை பெண்கள் செய்வார்கள். அதன்பிறகு அவர் அந்த பெண்களிடம் தனது செல்போனை திரும்ப பெறும் குறித்த நபர் அவர்களின் உதட்டில் முத்தமிட்டு ஓடிவிடுவார். இவ்வாறு அவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தான் 16 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். 2021ல் பெண் ஒருவருக்கு முத்தமிட முயன்றபோது குறித்த நபரை அவர் சரமாரியாக தாக்கி போலீசில் சிக்க வைத்தார். மேலும் குறித்த நபர் மீது ஏராளமான புகார்கள் போலீசுக்கு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீதான வழக்கு எடின்பர்க் ஷெரீப் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் நீண்டகாலமாக வழக்கு நடந்து வந்தது.

இதற்கிடையே தான் குறித்த நபருக்கு தனது மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். 16 வயது சிறுமி உள்பட 8 பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும் வேறு 6 பெண்கள் கூறிய குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் சாட்சி, ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் குறித்த நபர் ஒப்புக்கொண்ட குற்றங்களுக்காக அவருக்கு சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தான் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க அவர் முடிவு செய்தார். தனது தவறை உணர்ந்த அவர் பொதுவெளியில் நடமாடாமல் வீட்டு காவலில் இருப்பதாகவும், சமூக பணியில் ஈடுபடுவதாகவும், சம்பளம் இன்றி வேலை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் மின்னணு சாதனங்கள் மூலம் தன்னை கவனிக்கும்படியும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு நீதிமன்றமும் ஒப்புக்கொண்டது. இதையடுத்து அதன்படி குறித்த நபர் இரவு 7.00 மணி முதல் காலை 7.00 மணி வரை 189 நாட்களுக்கு வீட்டு காவலில் இருக்க வேண்டும். அவரது செயல்பாட்டை மின்னணு சாதனம் உதவியுடன் கண்காணிக்க வேண்டும். அதன்பிறகு அவர் 2 ஆண்டுகளுக்கு சமூக பணியிலும் ஈடுபடுவார். இதனையும் ஒருவர் மேற்பார்வை செய்ய வேண்டும். பின்னர் 252 மணிநேரம் வேலையிலும் ஈடுபட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் மிர்சா சிறை தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார்.

சர்வதேச ஊடகம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.