விவசாயம் மற்றும் கிராமிய காப்புறுதிச் சபையானது இலங்கையில் விவசாயத் துறையுடன் தொடர்புடைய பல நடவடிக்கைகளுடன் ஆடுகளுக்கு புதிய காப்புறுதியை வழங்கத் தொடங்கியுள்ளது.
விவசாய காப்புறுதிச் சபையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கடந்த வாரம் (30) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விளக்கமளிக்கும் போதே சபையின் தலைவர் எம்.எம்.பீ.வீரசேகர இதனைத் தெரிவித்தார்.
70,000 ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆடுகளுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் காப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக சண்டே ஒப்சர்வர் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு ஆடுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்திற்காக இவ்வருடம் 150 மில்லியன் ரூபாவும், விநியோகிக்கப்பட்ட ஆடுகளுக்கு காப்புறுதி வழங்குவதற்கான காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
விவசாயிகளுக்கு ஆறு வகையான பயிர்களுக்கு வழங்கப்படும் இலவச காப்புறுதியுடன் ஆடுகளுக்கான காப்புறுதித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.