36 ஆண்டுகளாக இரட்டை சிசுக்களை வயிற்றில் சுமந்து வந்த ஆண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

36 ஆண்டுகளாக இரட்டை சிசுக்களை வயிற்றில் சுமந்து வந்த ஆண்!


நபரொருவர் தான் கர்பமாக இருப்பதை அறியாமல் 36 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை சிசுவை தனது வயிற்றில் சுமந்து வாழ்ந்து வந்த அபூர்வ சம்பவம் ஒன்று இந்தியா நாக்பூரில் பதிவாகியுள்ளது.


நாக்பூரில் பிறந்த சஞ்சு பகத் அவரது பெரிய வயிற்றின் காரணமாக 'கர்ப்பிணி' என்று அவரது ஊர் மக்களால் கேலி கிண்டலுக்கு உள்ளானவர்.


1963ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டது. என்றாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். 20 வயதாகும் வரை அவர் தனது பெரிய வயிற்றை பற்றி கவலைப்படவில்லை.


ஆனால் உண்மையில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், 36 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது சொந்த இரட்டை உடன்பிறப்புகள் அவரது வயிற்றில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான்.


ஒரு கட்டத்தில் மூச்சு விடுவதற்கே பெரும் அவதி அடைந்துள்ளார். இதன் காரணமாக வேலை செய்ய கூட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.


பின்னர் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொண்ட நிலையில், முதலில் அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதாக நினைத்த நிலையில், பின்னர் அறுவை சிகிச்சையின் போது தான் தெரியவந்திருக்கிறது அவரது வயிற்றில் நிறைய எலும்புகள் மற்றும் சதைகள் வளர்ந்து இருப்பது.


இதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் பின்னர் உள்ளே பரிசோதித்தபோது கை, கால்கள், பிறப்புறுப்பின் சில பகுதிகள், தாடைகள் ஆகியவற்றைக் கண்டறிந்ததாக கூறியுள்ளார்.


அவரது வயிற்றில் கருவுக்குள் கரு உருவாகி இரட்டை ஆண் சிசு இருப்பது தெரியவந்துள்ளது.


இது மருத்துவத் துறையில் மிகவும் அரிதான நிகழ்வு என கூறப்படுகிறது.


இதையடுத்து சஞ்சு பகத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சிசு அகற்றப்பட்ட நிலையில், கிடைகப்பெற்ற கை கால்கள், தலை முடி, பிறப்புறுப்பு என உடற்பாகங்களை பார்க்க சஞ்சு பகத் மறுத்துவிட்டார்.


கடந்த 36 ஆண்டுகளுக்கு மேல் சஞ்சு பகத் தனது வயிற்றுக்குள் இரட்டை ஆண் சிசுவை சுமந்து வாழ்ந்துள்ளது மருத்துவத்துறையில் மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கருவில் கரு என்பது மிகவும் அரிதான ஒன்று என்றும் இது லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சஞ்சு பகத் நலமுடன் இருப்பதாகவும் தனது அன்றாட வேளைகளில் அவர் சிரமமின்றி ஈடுபட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.