குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்தில் இருந்தவாறு, பொதுமக்களுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க தரகர்களாக செயற்பட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பிரவேசிக்கும் பொதுமக்களிடம் அவர்கள் பணம் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, வரிசைகளில் காத்திருக்காமல் உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்காக குறித்த சந்தேகநபர்கள் விண்ணப்பத்தாரர்களிடம் தலா 25 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.