யார் இந்த அலி சப்ரி ரஹீம்? அலி சப்ரி ரஹீம் ராஜபக்சாக்களுக்கு கூஜா தூக்கியது இதற்காகவா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யார் இந்த அலி சப்ரி ரஹீம்? அலி சப்ரி ரஹீம் ராஜபக்சாக்களுக்கு கூஜா தூக்கியது இதற்காகவா?


கடந்த 23ஆம் திகதி காலை 9.45 மணிக்கு டுபாய் நாட்டில் இருந்து ஃப்ளை டுபாய் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமான இலக்கம், FZ 547 மூலமாக துபாய் நாட்டிலிருந்து வந்திறங்கிய Muslim National Alliance (MNA)
பாராளுமன்ற உறுப்பினர், அலி சப்ரி ரஹீம் அவர்கள் பாரிய தங்க கடத்தல் ஒன்றின் போது இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரபுக்கள் முனையத்தின் ஊடாக தங்கத்துடன் வெளியேற முற்பட்டபோது சுங்க அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகாரிகளால் ஏறக்குறைய ஐந்து மணிநேரம் விசாரணை நடாத்தப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கொடவத்தையில் உள்ள வருவாய் பணியக கிளைக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கடத்தலுக்கு உள்ளான தங்கம் மற்றும் தொலைபேசிகளும் அரசுடைமையாக்கப்பட்டன ஆக்கப்பட்டன.

மேலும் இவர் கைது செய்யப்பட்டபோது பல்வேறு அரசியல் வரப்பிரசாதங்களை பயன்படுத்தி வி்மான நிலையத்தில் இருந்து வெளியேற முற்பட்டதாகவும், சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யார் இந்த அலி சப்ரி ரஹீம்?

புத்தளம் மாவட்டத்தில் பாராளுமன்றத்திற்கு க்கு போட்டியிட்ட சகல முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கிய, Muslim National Alliance (MNA) இல் இருந்து புத்தளம் மாவட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, முஸ்லிம் சமூகத்திற்காகவும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் போராடப் போகிறேன் என கொக்கரித்து முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடித்து பாராளுமன்றம் சென்றவர்.

இவர் இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளராக அதன் சார்பில் Muslim National Alliance (MNA) போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாராளுமன்றம் சென்ற இவர் சிறுபான்மையினருக்கு எதிராக வந்த திருத்தச் சட்டமூலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கை உயர்த்தியவர். 

இலங்கையில் கொரோனா மரணங்கள் சம்பவித்த போதும், அந்தப் பலி முஸ்லிம்களின் தலையில் சுமத்தப்பட்ட போதும், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட ஜனாஸாக்களை எரிக்கும் போது வாய் மூடி இருந்தவர். எந்தவிதமான ஜனாஸா எரிப்பு போராட்டங்களிலும் கலந்து கொள்ளாத முஸ்லிம் சமூகம் சார்பான அக்கறை கொள்ளாத ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ராஜபக்ச அரசாங்கத்தில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போதும் ராஜாபக்ஸ அரசுக்கு கூஜா தூக்கியவர்

இனவாத அரசாங்கத்தில் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்பட்ட போது அதில் குளிர் காய்ந்து அவர்கள் செய்த இனவாதத்தை மேடைகளில் பேசி அதையும் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி பாராளுமன்றம் சென்றவர்.

எனவே. முஸ்லிம் சமூகம், முஸ்லிம் சமூகம் என முதலை கண்ணீர் வடித்து
முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை கொள்ளை அடித்து சமூகத்தின் முதுகில் சவாரி செய்யும் நபர்களை முஸ்லிம் சமூகத்தின் ஹீரோக்களாக அறிமுகம் செய்து சமூக மானத்தை காற்றில் பறக்க விடும் முஸ்லிம் கட்சிகள் இனியாவது பாடம் படிக்கட்டும்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.