நரேந்திர மோடியின் காலில் விழுந்து வரவேற்ற பிரதமர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நரேந்திர மோடியின் காலில் விழுந்து வரவேற்ற பிரதமர்!


பப்புவா- நியூகினிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, அவரது பாதங்களைத் தொட்டு, அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளித்துள்ளார்.


இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (எஃப்ஐபிஐசி) மூன்றாவது உச்சிமாநாட்டையொட்டி இந்திய பிரதமர், நேற்று ஞாயிற்றுக்கிழமை பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.


இதனூடாக பப்புவா கியூகினி நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோடியை பெற்றுள்ளார்.


சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் பப்புவா நியூ கினியில் வழக்கமாக வரவேற்பு அளிக்கப்படுவதில்லை என்றாலும், உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்குப் பிறகு வந்த பிரதமர் மோடிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.


நரேந்திர மோடியை வரவேற்ற, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, அவரை கட்டித்தழுவியதுடன், காலில் விழுந்து வரவேற்றார்.


அதன்போது, பிரதமர் மோடிக்கு 19 மரியாதை மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.