தீவிர சிகிச்சையில் இருந்த பிரபல நடிகர் சரத் பாபு உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீவிர சிகிச்சையில் இருந்த பிரபல நடிகர் சரத் பாபு உயிரிழப்பு!

 

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சரத் பாபு, தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 


அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


தமிழ் , தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் சரத் பாபு (வயது 71). மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் 1971 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன சரத் பாபு சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 


ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். 


மிகப்பெரும் ஹிட் அடித்த படங்கள் சரத் பாபுவிற்கும் பெரும் புகழை தேடிக்கொடுத்தது. தமிழ், தெலுங்கு மட்டும் இன்றி கன்னடா, இந்தி , மலையாள படங்களிலும் சரத் பாபு நடித்துள்ளார். 


90 களில் ரஜினிகாந்த் மற்றும் சீரஞ்சீவியின் உடன் சரத்பாபு நடித்த படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சரத்பாபு நடித்துள்ளார்.


இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனயில் சிகிசை பெற்று வந்த நடிகர் சரத் பாபு சிகிச்சை பலனின்றி காலமானர். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.