இன்று (14) முதல் அமுலாகும் வகையில் 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை 2,600 ரூபாவாகும் என சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில் மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.