காலி - நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவர்கள் இன்று (14) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காலி - நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு எமது ஊடக பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது, காணாமல்போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் இன்று காலை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த நான்கு சிறுவர்களின் தாய்மார்களில் ஒருவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் தமது வீட்டு சுற்றுச்சூழலிலே இருந்ததாக பொலிஸாருக்கு குறித்த தாய் தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களின் பெற்றோர்களும் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக தொழில் செய்வதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கி தங்கியிருந்துள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை காலி - நெலுவ தெல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது அண்மை நாட்களாக நாடளாவிய ரீதியில் சிறுவர் கடத்தல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
இதற்கமைய நேற்றைய தினமும் முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இரு இளைஞர்கள் இணைந்து சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்டுள்ள போது சந்தேகநபரான இளைஞரொருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.