தன்பாலின சேர்க்கை குற்றமற்றது; திருத்தத் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் அல்ல!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தன்பாலின சேர்க்கை குற்றமற்றது; திருத்தத் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் அல்ல!


தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம்  அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (09) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்தவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே.அதுல எச்.டி சில்வா, ஷெனாலி டி.வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அதன்படி, இந்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நிறைவு செய்த உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலத்தின் சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா அல்லது முரணானதாக என்ற தமது முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிடம் இரகசியமாக வழங்குவதாக அறிவித்தது.


இந்த திருத்தம் தண்டனைச் சட்டம் தொடர்பான நாடாளுமன்றின் எதிர்பார்ப்புகளுக்கு முரணானது என்றும், அதன் மூலம் அரசியலமைப்பின் விதிகளை கடுமையாக மீறப்படுவதாகவும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.


தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்ற உறுப்பினர் தொலவத்தவினால் முன்வைக்கப்பட்ட குறித்த சட்டமூலம், தன்பாலின சேர்க்கையை குற்றமற்றது என விளக்க முயற்சிக்கும் அதேவேளையில் அத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.