மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான வாகனங்களை தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், 60 இலட்சம் வாகனங்கள் மட்டுமே QR குறியீட்டு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வருமானவரி அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள், மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரின் உதவியுடன் தகவல் அமைப்பில் இருந்து நீக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.