ஹம்பாந்தோட்டைக்கு அருகில் இன்று (24) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 12.45 அளவில் இந்த நில அதிர்வு உணர்ப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவிலுள்ள, கடற்பகுதியில் ஆழமற்ற பிரதேசத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடைய தேவையில்லையென அந்தப்பணியகம் கோரியுள்ளது.