அரசுப் பாடசாலைகள் 2-4 மற்றும் 7-10 வகுப்புகளுக்கு இடைப்பட்ட மாணவர்களைச் சேர்க்க அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பிறகு வெளியிடப்படும்.
இந்தச் சுற்றறிக்கையில் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கை கடிதங்கள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.