
பயணிகளின் தேவைக்கு ஏற்ப 10% முதல் 15% வரையிலான கொள்ளளவு கொண்ட பஸ்களை இன்று இயக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை (16) 50% வெளி மாகாண பேருந்துகள் இயங்கும் எனவும், நாளை மறுதினம் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு பேருந்துகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
அத்துடன், கிராமங்களுக்குச் சென்ற மக்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்காக பல விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.