வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அந்த கோரிக்கைக்கு இதுவரை நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி பதில் வழங்கவில்லை எனவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி மீதான தடையை இவ்வருட வரவுசெலவுத் திட்டம் தளர்த்தும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களாக இலங்கைக்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் இறக்குமதியாளர்களும் பாவனையாளர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)