இலங்கை கிரிக்கெட் அணிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 274 ஓட்டங்களை குவித்தது.
பதில் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியால் 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மத்தியூஸ் 18 ஓட்டங்களும், சமிக்க கருணாரத்ன 11 ஓட்டங்களும், லஹிரு குமார 10 ஓட்டங்களும் பெற்றனர்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரையும் 10 ஓட்டங்களைக் கடக்க அனுமதிக்கவில்லை, மேலும் பந்துவீச்சில் நியூசிலாந்து சார்பாக ஹென்றி ஷிப்லி 31 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், டாரில் மிட்செல் மற்றும் பெலேர் திக்னர் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன்படி நியூசிலாந்து அணி 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. (யாழ் நியூஸ்)