
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் மனித கடத்தலை தடுப்பதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் அவதானிப்புகள் பெறப்பட உள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.