![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPQvF5vvkWR0Y3-de-jHCTEa9vjlTF4NPgK5Gr8veixBT9K6kcg1kx8GbzCe7P7w9od24CM9pq7usid8tdW9hIKlt4g9NV4PfY4c2MkpO4xJHftwKWllDqznvelc_IO4gB-7OdWkecvLxW_EEVgC4IIqB6BgrHy4TJCSbl65lSx6MKv1v7a40FXhTf/s16000/sri_lanka1-1-002.webp)
எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைகளை அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அந்த ஆணைக்குழு வழங்கியுள்ளது.
முன்னதாக, எதிர்வரும் 09 ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.
எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு நிதி வழங்கப்படாமை உள்ளிட்ட காரணங்களால், உள்ளூராட்சி தேர்தல், திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டது.
இந்தநிலையில், எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.