வவுனியா - குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளன.
42 வயதுடைய தந்தை, 36 வயதுடைய தாய் மற்றும் 3 மற்றும் 9 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தந்தை தமது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு, தாம் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர்.
எவ்வாறாயினும், இதுவரை அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில், வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.