அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 329.02 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 346.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்தது.


எனினும், கடந்த வெள்ளிக்கிழமை (10) முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறது.


நேற்று (15) அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 59 சதமாகவும், விற்பனை பெறுமதி 344 ரூபா 66 சதமாகவும் பதிவாகியிருந்தது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.