மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிக நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிக நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை 10 நாட்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இன்று (08) இந்த உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், எதிர்வரும் ஏப்ரல் 20 முதல் 30 ஆம் திகதி வரையில் qqqமஹிந்த ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக தனது சேவைபெறுநரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென்கொரியாவுக்கு செல்ல வேண்டியிருப்பதால், வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு அவரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை கருத்தில் கொண்ட கோட்டை நீதவான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.