VIDEO: ஜப்பானிய கடற்கரையில் மீட்கப்பட்ட இராட்சத உலோக பந்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஜப்பானிய கடற்கரையில் மீட்கப்பட்ட இராட்சத உலோக பந்து!


ஜப்பான் நாட்டில் கடற்கரை ஒன்றில் உலோகத்தாலான மிகப்பெரிய பந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஜப்பானின் ஹமாமத்சு நகரத்திலுள்ள என்ஷூ கடற்கரையில் உலோகத்தால் ஆன மிகப்பெரிய உருண்டை வடிவ பந்து கிடந்துள்ளது. இந்த மர்ம பந்தை உள்ளூர்வாசியான பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை (21) காலை பார்த்துள்ளார். உடனடியாக இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.


கடற்கரையில் கிடந்த அந்த மர்ம பந்து இரும்பாலானதும், 1.5 மீட்டர் விட்டமும், துருப்பிடித்தும் இருந்துள்ளது. மேலும், அதன் இருபக்கமும் சிறு இணைப்பு வளையமும் உள்ளது. 200 மீட்டர் மூடப்பட்ட பகுதியான அந்த பந்தில் வெடிக்கும் காரணிகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதை பாதுகாப்பு உடைகளை அணிந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


ஆனால், அதன் உள்ளே ஏதுமில்லை எனவும், வெற்றிடமாகத்தான் இருந்தது எனவும் அதனை எக்ஸ்ரே செய்த அதிகாரிகள் தெரிவித்ததாக உள்ளூர் மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


மேலும், அந்த பந்தினை மாலை 4.00 மணியளவில் அங்கிருந்து அகற்றிவிட்டபோதிலும் அது என்னவென்று இதுவரை தெரியவில்லை.


இதுகுறித்து ஆராய ஜப்பான் ராணுவம் மற்றும் கடற்கரை காவல்படைக்கு புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.