கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி மீதான கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தமது போராட்டத்தின் போது படுகாயமடைந்து நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிமல் அமரசிறி (61) இன்று காலமானதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். (யாழ் நியூஸ்)