
இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் அனுசரணையுடன் அரசாங்கம் நேற்று (10) கொழும்பில் உள்ள துருக்கிய தூதுவருக்கு “சிலோன் டீ” ஒரு தொகுதியை அன்பளிப்பாக வழங்கியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் அவசரகால பதிலளிப்பு பணிப்பாளர் நாயகம் O.L அமீர் அஜ்வாட் அவர்களால் துருக்கி தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபை என்பனவற்றினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பாவுக்கான பணிப்பாளர் நாயகம் பிரியங்கிகா தர்மசேன, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் மற்றும் இலங்கை தேயிலை சபையின் ஊக்குவிப்பு பணிப்பாளர் பவித்ரி பீரிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)