கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல - அம்பேபுஸ்ஸவுக்கு இடையில் ஒரு வழியாக மாத்திரம் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, நாளை (23) முதல் பெப்ரவரி 01 ஆம் திகதி வரை வரக்காபொல முதல் அம்பேபுஸ்ஸ வரையான பகுதியில் வாகன போக்குவரத்தானது ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்படுமென காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதி செப்பனிடப்படவுள்ளதால் இந்த மட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, அவ்வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் வரக்காபொல முதல் அம்பேபுஸ்ஸ வரையான பகுதியினூடாக பயணிக்க விரும்பும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.