
இது தொடர்பான கடிதம் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் அனைத்து மாவட்ட பிரதி/ உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவிடம் வினவிய போது, வேட்புமனுக்களை பெற்றுக் கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


