அக்குறணை வெள்ளத்திற்கு கட்டிடங்களும், பாலங்களுமா காரணம்.? அக்குறணை வெள்ளப்பெருக்கு தொடர்பில் பேருவளை ஹில்மியின் கட்டுரைக்கான பதில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்குறணை வெள்ளத்திற்கு கட்டிடங்களும், பாலங்களுமா காரணம்.? அக்குறணை வெள்ளப்பெருக்கு தொடர்பில் பேருவளை ஹில்மியின் கட்டுரைக்கான பதில்!


(தங்கள் Yazh News Media வில் "அக்குறணை மக்களே ஒட்டகத்தை கட்டி வையுங்கள்" என்ற தலைப்பில் பேருவலை ஹில்மி என்பவர் எழுதியிருந்தார். அவரது கட்டுரைக்கு மறுப்பாகவே இதனை எழுதுகிறேன்) 

அன்பான சகோதரர் பேருவலை ஹில்மி அவர்களே..!

அஸ்ஸலாமு அலைக்கும்...

அக்குறணை மக்களின் பால் மனித நேயத்துடன் வெள்ளம் பற்றி எழுதிய உங்களது கண்ணோட்டத்திற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இருப்பினும் உங்களது கட்டுரையை அக்குறணை மக்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு காரணம் வெள்ளம் ஏற்படுவதற்கு குறிப்பிட்ட இதுதான் காரணம் என மற்றவர்களது அறியாமையையே நீங்களும் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள். 

உண்மையான காரணங்கள் உங்களுக்கு தெரியுமா..? 

நீங்கள் அக்குறணைக்கு வந்து எமது சிவில் அமைப்புகளுடன் இதற்கான காரணங்களை ஆராய்ந்துள்ளீர்களா..? 

அக்குறணையின் ஆற்றின் வரலாறு உங்களுக்கு தெரியுமா..? 

1900 ஆண்டிற்கு முன்பு கட்டிய பல பாலங்கள் இப்போதும் உண்டு. அப்போதெல்லாம் வராத பாரிய வெள்ளம் இப்போது வருகிறது என்றால் அதற்கு காரணம் பாலங்களும், கட்டிடங்களும் மட்டும் அல்ல என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ அக்குறணை மக்கள் ஆற்றை குறுக்கே மறைத்து கட்டிடங்களைக் கட்டி உள்ளது போல் சமூக ஊடகங்களில் பதிவிடாதீர்கள். பாலங்களும், கட்டிடங்களும் காரணங்களாக இல்லை என நாம் கூறவில்லை. ஒரு சில கட்டிடங்கள் இதற்கு காரணமாக உள்ளதை நாம் மறுக்கவில்லை ஆனால் இது மட்டுமே பிரதான காரணமாக நீங்கள் எழுதுவது உங்களின் அறியாமையையே பறை சாற்றுகிறது. 

அக்குறணையில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்திற்கு பின்வரும் காரணங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வு கிடைத்தால் மாத்திரமே அக்குறணை நகருக்கு வெள்ளம் வருவதைத் தடுக்க முடியுமே தவிர பாலங்களையும், கட்டிடங்களையும் தகர்ப்பதால் மாத்திரம் எதுவுமே நடந்து விடாது என உங்கள் கவனத்திற்கும், ஏனையவர்களின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம். 

வெள்ளத்திற்கான காரணங்கள் வருமாறு:

1. சகதி நிரம்புதல் (Silting)
2. சில குறிப்பிட்ட கட்டுமாணங்கள் (Constructions)
3. துரிதமாக தண்ணீர் வழிந்தோடுதல் (Water runoff time)
4. ஓடையின் கொள்ளளவு (Stream- Capacity)
5. இயற்கை நீரோட்டத்திற்கான தடைகள் (Obstacle Water Flow) 
6. குப்பைகள் (Debris) 

சிறிய காரணங்கள்:

7. மழையின் அடர்த்தி ( Rain Water Density)
8. ஊடுறுவல் வடிகால் இன்மை (Lake of infiltration drains)

இது தவிர இன்னும் மறைமுகமான பல அரசியல் காரணங்களும் உண்டு. 
எதையுமே சரிவர ஆராயாமல் கட்டிடங்களும், பாலங்களும் தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் அறிக்கை விடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். 

அக்குறணை மக்கள் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது அதிக மனிதாபிமானம் உள்ளவர்கள். என்ன நிலமை ஏற்பட்டாலும் அவர்களுக்காக முன்னின்று உதவ பின்வாங்காதவர்கள். இப்படியானவர்கள் தமக்குத் தாமே மண்ணை அள்ளி தம் தலைகளிலேயே போட்டுக் கொள்ள மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சில கட்டிடங்களே காரணமாக உள்ளதே தவிர முழுக் கட்டிடங்களுமே அல்ல. அப்படி முழுக் கட்டிடங்களையும் தகர்த்தாலும் இங்கு குறிப்பிட்டுக் காட்டப்பட்ட ஏனைய பிரதான காரணங்களால் இதே வெள்ளம் தொடரவே செய்யும் என்பதே ஆய்வாளர்களின் தீர்க்கமான முடிவாகும். 

அனைத்தையும் அறிந்து பதிவிடுவது சிறந்தது. நன்றி

-எம்.சீ. எம் நளீர்
அனைத்து மஸ்ஜித்களின் சம்மேளனம் - அக்குறணை

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.